Thursday, January 15, 2009

செய்யாறு சுகாதார மாவட்டம்


தனியாருக்கு போட்டியாக ஆரம்ப சுகாதார நிலையங்களை நவீனமாக மாற்றி வருவதால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. செய்யாறு சுகாதார மாவட்ட சுகாதார துறை துணை இயக்குனர் அலுவலகத் திற்கு உட்பட்டு 35 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள் ளன. இதன் கீழ் 157 துணை சுகாதார நிலையங்கள் செயல்படுகின்றன. ஆரம்ப சுகாதார நிலையங்கள் சுகாதாரமற்ற நிலையில் இருந்ததால் நோயாளிகள் சிகிச்சை பெற தயங்கினர். இதனைக் கருத்தில் கொண்டு சுகாதார நிலையங்களை மேம்படுத்தவும், சுகாதாரமாக மாற்றவும் 2007ம் ஆண்டு தேசிய ஊரக சுகாதார திட்டம் கொண்டு வரப்பட்டது.

இந்த திட்டத் திற்காக ஆண்டு தோறும் ஒவ் வொரு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் தலா ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப் படுகிறது. இந்த நிதி சுகாதார துறை துணை இயக்குனர் மூலம் அந்தந்த ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள், செவிலியர்களை கொண்ட பயனாளிகள் நல சங்கத்திடம் வழங்கி ஆரம்ப சுகாதார நிலையங்களை பராமரிக்கின்றனர். இதில் ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையங் களிலும் தனியாரை மிஞ்சும் வகையில் சிறப்பு கருவிகள், ஸ்கேன் வசதி, படுக்கை, சிசு வளர்ச்சி, சிசுவின் இதய சோதனை செய்ய சிறப்பு கருவிகள் உட்பட பல மாற்றங்கள் செய்யப்படுகிறது. கர்ப்பிணி பெண்கள் பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வர "ஆண்டி நேட்டர் கார்டு' (அடையாள அட்டை) வழங்கப்படுகிறது. இந்த அட்டையில் உள்ள எண் ணிற்கு தொடர்பு கொண் டால் ஆம்புலன்ஸ் மூலம் கர்ப்பிணிகள் மருத்துவமனைக்கு இலவசமாக அழைத்து செல்லப்படுவர்.

No comments:

Post a Comment