Saturday, January 17, 2009

ஆரம்ப சுகாதார நிலையங்களில் கூடுதல் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த எதிர்காலத் திட்டம்

தேசிய கிராமப்புற சுகாதார திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களை, மத்திய அரசு நிர்ணயித்துள்ள சுகாதார தரத்திற்கு ஏற்ப தன்னிறைவு பெற்ற தரமானதாக மாற்ற முயற்சி நடக்கிறது. இந்த திட்டத்தில் முதல் பகுதியாக 30 சதவீத ஆரம்ப சுகாதார நிலையங்கள் 2009-ம் ஆண்டுக்குள் தன்னிறைவு பெற்றுவிடும். படிப்படியாக திட்டம் செயல்படுத்தப்பட்டு, போதிய கட்டிட வசதிகள்,போதிய கருவிகள் அனைத்தும் வாங்கப்பட்டு தமிழ்நாட்டில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களும் 2012-ம் ஆண்டுஇறுதிக்குள் இந்திய சுகாதார தரஅளவு பெற்ற தன்னிறைவுபெற்றவைகளாகவிளங்கும்.

No comments:

Post a Comment